"கொரோனா "-நம் நாட்டில் மேலும் 581 பேர் உயிரிழப்பு;

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 581 பேர் உயிரிழந்துள்ளனர்
 
corona

தற்போது நம் இந்தியாவில் அதிகமாக பேசப்படும் வார்த்தை என்றால் அதனை கொரோனா என்றே சொல்லலாம். அந்த படி கொரோனாவின் தாக்கமானது இந்தியாவில் அதிகமாக காணப்பட்டது. அதுவும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக நம் இந்தியாவில் இந்த நோயின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததே என்று கூறலாம் மேலும் இவை கண்ணுக்கே தெரியாமல்  புகுந்து இறுதியில் மனிதனின் இறப்பிற்கு தள்ளுகிறது. இதனால் மனித உயிர் மட்டுமின்றி நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வெகுவாக சரிந்து காணப்பட்டது ஏனென்றால் இந்த நோய் பரவ ஆரம்பிக்கும் போது நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக நம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் அதிகரித்தது இந்த சூழலில் தற்போது இந்த நோயின் தாக்கம் குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் இந்த நோயினால் உயிரிழப்பும் தற்போது குறைந்து காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயினால் 581 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை நம் நாட்டில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 989 பேர் இந்த நோயின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது அதோடு மட்டுமின்றி இந்த நோயினால் கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரத்து 130 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் நோயின் பாதிப்பை விட குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

From around the web