சென்னையை தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களில் தலைவிரித்தாடும் கொரோனா!

சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு கோவை திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் அடுத்ததாகக் கொரோனா அதிகம் உள்ளதாக தகவல்!
 
சென்னையை தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களில் தலைவிரித்தாடும் கொரோனா!

மக்கள் மத்தியில் கண்ணுக்கே தெரியாமல் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஒரு ஆட்கொல்லி நோயாக கொரோனா உள்ளது.கொரோனா வைரஸ் மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மக்களின் உடல்  மக்களின் மரணத்திற்கு கொண்டு செல்கிறது. இதனால் மக்கள் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவர்கள் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உடன்  போராட முகக்கவசம்  போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.  இந்தியாவில் கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டில் இறுதியில் கொரோனா குறைவாக காணப்பட்டது. இதனால் இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

corona

ஆனால் தற்போது இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரம் பஞ்சாப் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் தாக்கம்  கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் 2564 கொரோனா, மக்களுக்கு வேதனை அளித்துள்ளது.

சென்னையை தொடர்ந்து அடுத்த இடத்தில் செங்கல்பட்டில் 772 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது .செங்கல்பட்டுக்கு பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 540 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதன்பின்னர் திருவள்ளூரில் 356 பேருக்கும் தூத்துக்குடியில் 244 பேருக்கும் திருப்பூரில் 225 பேருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது .மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்ததாகவும்  மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா  7 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.இதனால் கொரோனாவானது மேலும் வலுவாக பரவியது என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வைரஸ் உருமாறி கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

From around the web