11 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் கொரோனா நோய்க்கு 48 பலி!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்க்கு 48 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது!
 
11 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் கொரோனா நோய்க்கு 48 பலி!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்  என்பது தமிழகத்தில் நிலவிய நிலையில் தற்போது எங்கும் கொரோனா எதிலும்  கொரோனா என்ற சூழல் நிலவுவது மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் எங்கு சென்றாலும் முதலில் பார்ப்பது கொரோனாபரிசோதனை. அந்த நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இதனை எதிர்த்து போராடும் வண்ணமாக தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

corona

ஆயினும் இன்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன. இத்தகைய கொரோனாவானது கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆயினும் தற்போது மீண்டும் கொரோனா எழுந்துள்ளது மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இது தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அந்த படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இந்நோயில்  பதினோராயிரம் நெருங்கியதாக கூறப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த கொரோனா ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த் தொற்றானது தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்து மக்களை மிகுந்த வேதனையும் சுகாதாரத் துறை அதிகாரிகளை மிகுந்த சோதனையிலும் தள்ளியுள்ளது.இதனால் தினம் தினம் கொரோனா நோயின் தாக்கமானது தமிழகத்தில் அதிகரித்து வருவது மறுக்க முடியாத உண்மையாக மாறிவிட்டது. மேலும் மக்கள் அனைவரும் இந்த நோய்க்கு எதிராக போராடி வருகின்றனர்.

From around the web