புதுச்சேரியில் 418 பேருக்கு கொரோனா தொற்று! 3 பேர் பலி!தொடர் சோகம்!

புதுச்சேரியில் ஒரே நாளில் 418 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது!
 
புதுச்சேரியில் 418 பேருக்கு கொரோனா தொற்று! 3 பேர் பலி!தொடர் சோகம்!

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் சொல்லி இருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் தேர்தல் தினத்தை ஒட்டி 144 தடையானது போடப்பட்டது.

corona

மேலும் புதுச்சேரியில் 72 மணி நேரத்திற்கு மதுபான கடைகளும், மதுபான விடுதிகள் ஆகியவையும் மூடப்பட்டன. இந்நிலையில் சட்டமன்றத்தேர்தல்  முடிந்த நிலையில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இந்த நிலையில் கொரோனா  தாக்கமானது அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில கட்டுப்பாட்டு விதிகளை புதுச்சேரியில் விரித்தார். மேலும் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் நேற்றைய தினம் கூறினார் புதுச்சேரியில் மக்கள் கட்டுபாட்டுடன் இருந்தால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் அவர் கூறியிருந்தார் மேலும் அபராதத்துடன்  முக கவசமும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இன்றையதினம் புதுச்சேரியில் தகவல்கள் வெளியானது. அதன்படி புதுச்சேரியில் ஒரே நாளில் புதிதாக 418 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் புதுச்சேரியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web