ஆயிரக்கணக்கில் கொரோனா! லட்சக்கணக்கில் மாதிரிகள் பரிசோதனை!

தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 941 கொரோனா பேருக்கு  கண்டறியப்பட்டுள்ளது!
 
ஆயிரக்கணக்கில் கொரோனா! லட்சக்கணக்கில் மாதிரிகள் பரிசோதனை!

மக்கள் மத்தியில் எங்கும்  கொரோனா எதிலும்  கொரோனா என்ற நிலையே தற்போது தமிழகம் எங்கும் பரவி காணப்படுகிறது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் அங்கு முதலில் கூறுவது கொரோனாவே அத்தகைய சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த சோதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் சில வாரங்களாக இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும் அரசின் சார்பில் பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் சில தினங்கள் முன்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.

corona

அதன்படி பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளையும் அரசு விதித்துள்ளது . ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதன் மத்தியிலும் தமிழகத்தில் கொரோனா வின் பாதிப்பானது 11 ஆயிரத்தை தொட்டுள்ளது மிகுந்த வேதனை அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 10 941 பேருக்கு பாதிப்பு உறுதியானதாக  சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் இதில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு 10916 பேர் வெளிநாடு வெளி மாநிலங்கள் இருந்தவர்களுக்கு 25 பேரும் என மொத்தம் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 590 பேர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா  பாதிப்பானது மூவாயிரத்தை கடந்து அங்குள்ள மக்களை மிகுந்த வேதனையில் ஆளாகியுள்ளது.

From around the web