அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு: எப்படி?

 

உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வரும் கொரோனா ரோன வைரஸால் உலகில் உள்ள பல விஐஐபிக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டிரம்ப் ஆலோசகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் இருவருக்குமே பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் மேலும் தானும் தனது மனைவியும் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் விரைவில் இந்த தொற்றில் இருந்து விடுபடுவோம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார் 

நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்த தேர்தலில்  போட்டியிடும் ட்ரம்புக்கு கொரோனா பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web