தேனியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பானது 500ஐ நெருங்கியது!!

தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 496 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியாகியுள்ளது!
 
theni

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக காணப்படுவது ஊரடங்கு மற்றும் கொரோனா என்ற வார்த்தையையே. காரணம் தமிழகத்தில் மார்ச் மாதத்தின் முதல் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது பீதியில் உள்ளனர் மக்கள்.தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் இந்த ஆட்சியில் முதல்வராக உள்ளார் அந்த கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் ஆட்சிக்கு ஆரம்பம் முதலே அவருக்கு பல்வேறு விதமான இன்னல்கள் கஷ்டங்கள் தமிழகத்தில் காணப்பட்டன.corona

இருப்பினும் அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். இந்த சூழலில் தமிழகத்தில் முழு ஊரடங்கு  மிகவும் கடுமையாக உள்ளது. இதனால் பல பகுதிகளில் இந்த கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த கொரோனா பாதிப்பானது அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில்  ஒரு சில மாவட்டங்கள் மிகுந்த  சுற்றுலாத்தலமாக காணப்படும்.

அதன் வரிசையில் மேகமலையை பெற்று மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக உள்ளது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தில் தற்போது புதிதாக இந்த ஆட்கொல்லி நோய் ஆனது 496 பேருக்கு பாதித்து அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த கொரோனா நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

From around the web