இந்தியாவில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகமாகி வந்தது என்பது தெரிந்ததே. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உலகிலேயே ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் பிரேசில் அமெரிக்காவை தாண்டி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது 

corona

இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் நிலைமை மோசமாகிவிடும் என்றும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவில் தாக்கி வருகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே உடனடியாக மகாராஷ்டிர மாநிலத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

From around the web