சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா! ஒரே நாளில் 14 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து1352  வீடு திரும்பினார்!
 

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோய் என்றால் முதலில் நினைவு கொரோனா மட்டும் தான். முதலில் கொரோனா சீனாவில் தொடங்கியது. சீனாவிலிருந்து உலகின் பல நாடுகளுக்கு கொரோனா பரவியதாகவும், இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே கொரோனா தொடங்கிவிட்டது.கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே நாடு முழுவதும் முழு ஊரடங்கு சட்டத்தினை அமல்படுத்தியது. மேலும் சில தினங்களுக்கு முன்புதான் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது.

corona

இதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழக அரசு மாநிலங்களுக்கு இடையேயான திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது 2000 தாண்டி உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. மேலும் சென்னையில்  24 மணி நேரத்தில்  815 பேருக்கும் கோயம்புத்தூரில் 211 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரத்தில் 80 பேருக்கும், திருவாரூர், திருச்சியில் 58 பேருக்கும், நாகையில் 56 பேருக்கு கொரோனா. திருப்பூர் மாவட்டத்தில் 52 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கும், வேலூரில் 20 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்ததாகவும் தங்கள் எனது மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 1352 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web