கும்பமேளாவில் கலந்து கொண்ட 1,701 பேருக்கு கொரோனா உறுதி!

 
கும்பமேளாவில் கலந்து கொண்ட 1,701 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் திருவிழாக்கள் மற்றும் கூட்டங்கள் ரத்து செய்யும்படி மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வாரில் நடக்கும் கும்பமேளா திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளதாகவும், பக்தர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் இந்த விழாவில் கலந்து கொண்டு இருப்பதால் கொரனோ வைரஸ் மிக அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது

kumbamela

கடந்த 2 நாட்களில் மட்டும் கும்பமேளாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பக்தர்கள் ஆயிரம் பேருக்கு கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 1,701 பக்தர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது,

From around the web