சென்னையில் 10 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே கொரோனா: ஆறுதல் தகவல்

கொரோனா வைரஸால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சென்னையில் தற்போது படிப்படியாக குறைந்து தற்போது சென்னையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 10,645 ஆக குறைந்துள்ளது என்ற ஆறுதல் தகவல் கிடைத்துள்ளது

 

கொரோனா வைரஸால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சென்னையில் தற்போது படிப்படியாக குறைந்து தற்போது சென்னையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 10,645 ஆக குறைந்துள்ளது என்ற ஆறுதல் தகவல் கிடைத்துள்ளது

சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து வருகிறது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 5495 என்பதும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 497,066 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னையில் இன்று மட்டும் 978 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,591 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 76 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 8307 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 6227 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 441,649 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 86486 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 56,19,012 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web