ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா; ஆசிரியரே காரணம்!

சென்னை கீழ்பாக்கம் பாலவிகார் ஆதரவற்றோர் இல்லத்தில் 74 பிள்ளைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது!
 
ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா; ஆசிரியரே காரணம்!

கொரோனா மனிதனின் கண்ணுக்கு தெரியாமல் மனிதனின் உடலில் சென்று மனிதனின் மிகப்பெரிய இன்னல்போல் உள்ளாக்குகிறது. தற்போது மிகவும் அதிகமாக காணப்படுவது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இந்த நோய்க்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா நோயானது பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகமாக பரவுகிறது. நாட்டிலுள்ள பல மருத்துவமனைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. இதனால் பலரும் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர்.corona

ஓரளவு பொருளாதாரத்துடன் உள்ள மக்களாலேயே இந்த கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாமலும் நோய்க்கு செலவழிக்க முடியாமல் இருக்கும் நிலையில் தற்போது ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு இந்த நோய் பரவியதால் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவை தமிழகத்தில் நடை பெற்றது மிகவும் கொடுமையாக உள்ளது. அதன்படி சென்னை கீழ்ப்பாக்கம் பாலவிகாஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதித்த குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தி  உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த 74 குழந்தைகள் சிறார்கள் உள்ள இல்லத்திற்கு வந்து சென்ற ஆசிரியர் ஒருவரால் இந்த கொரோனா நோய் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதனை சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியான நிலையில் மாநகராட்சி நேரில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 67 குழந்தைகளில் 27 குழந்தைகள் மட்டுமே கொரோனா என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கின்றனர்.

From around the web