கேரளாவில் ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா: புதிய உச்சம்!

 

இந்தியாவில் கேரளாவில் தான் முதல் முதலாக கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டாலும் முதல்வர் பினராய் விஜயன் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா வைரஸ் அம்மாநிலத்தில் மெதுவாக கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேல் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 

இன்று உச்சமாக உச்சகட்டமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கேரள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இன்று புதிய உச்சமாக 6,324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42,786ல் இருந்து 45,919 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை 613 பேர் பலியாகியுள்ளனர்.

From around the web