தமிழகத்தில் 5,017, சென்னையில் 1,306 பேருக்கு கொரோனா: மீண்டும் அதிகரிப்பதால் பரபரப்பு!

 

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6,30,408 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இன்னும் 45,279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு என்றும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,917ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

சென்னையில் மேலும் 1,306 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், சென்னையில்  மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,711 பேருக்கு தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 5548 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் இதனையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 575,212 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று தமிழகத்தில் 79,279 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தம் தமிழகத்தில் 630,408 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web