டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 மருத்துவர்களுக்கு கொரோனா!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 35 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பானது உறுதியானது!
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 35 மருத்துவர்களுக்கு கொரோனா!

மக்கள் மத்தியில் தற்போது மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு கண்ணுக்கு தெரியாத கிருமி  கொரோனா வைரஸ் உள்ளது. இந்த கொரோனா  முதலில் அண்டை நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவியது. குறிப்பாக இந்தியாவிலும் இந்த கொரோனா  வைரசின் தாக்கம் அது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்திய அரசானது நாடெங்கும் ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது. இதன் கொரோனா  தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

corona

குறிப்பாக இந்திய மாநிலங்களான டெல்லி , பஞ்சாப் ,தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கொரோனா  தாக்கம் தலைவிரித்தாடுகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்தியாவில் தற்போது பாரத பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. அவர் நேற்றைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டார் . மேலும் அவர் முன்னதாக அதே மருத்துவமனையில் மார்ச் 1ஆம் தேதி முதலாவது கொரோனா தடுப்பூசியை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

 தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 35 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மிகவும் படத்தத்தில் உள்ளனர். மேலும் நேற்றைய தினம் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் பணியாற்றிய 37 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பானது கண்டறியப்பட்டது. தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் கொரோனா  கண்டறியப்பட்டது மிகுந்த சோகம் மற்றும் நோயாளிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

From around the web