இந்தியாவில் ஒரே நாளில் 30 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
corona

மக்களிடையே அதிகமாகப் பேசப்பட்ட ஆட்கொல்லி நோயாக வலம் வந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமி என்றால் அதனை கொரோனா வைரஸ் என்றே கூறலாம். அந்தப்படி கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமாகவே காணப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் உயிர்பலி களின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்பட்டது மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம் அதன் விளைவாக இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அம்மாநில அரசு அமல்படுத்தியது.corona

மேலும் இதனால் பலரின் வாழ்வாதாரமும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் சில வாரங்களாகவே இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. அதன் விளைவாக தற்போது இந்தியாவில் லட்சக்கணக்கில் வந்த கொரோனா நோயின் தாக்கம் தற்போது சில ஆயிரங்களுக்கு மாறியது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை.

 அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்து 93 பேருக்கு இந்த கொரோனா நோயை உறுதி செய்யபட்டுள்ளது. மேலும் இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதே சூழலில் குணமடைதல் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது அந்த படி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 45 254 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது இதனால் குணமடைந்து எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 456 இலிருந்து 3 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்து விகிதம் 97.32 சதவீதம் உயிரிழப்பு விகிதம் 1.3 சதவீதமாக உள்ளது.

From around the web