சரவணா ஸ்டோரில் மேலும் 26 பேருக்கு கொரோனா!அதிர்ச்சியில் ஊழியர்கள்!

புரசை வாக்கம் சரவணா ஸ்டோரில் கடையில் பணிபுரிந்த 26 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்!
 
சரவணா ஸ்டோரில் மேலும் 26 பேருக்கு கொரோனா!அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தனது உழைப்பால்  இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள்  உள்ளது சரவணா ஸ்டோர். சென்னை தொடங்கி திருநெல்வேலி வரை அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளது அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான். இந்த சரவணா ஸ்டோரில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பது அளவிற்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆட்கொல்லி நோயான கொரோனா சில தினங்களாக தலைவிரித்தாடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக காணப்படும் கொரோனா தாக்கமானது சரவணா ஸ்டோர் ஐயும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம்.

corona

இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா  சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோரில் பணிபுரியும் 26 பேருக்கு கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே 13 பேருக்கு இந்த ஆட்கொல்லி கொரோனா கண்டறிய பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு வேதனை அளிக்கிறது. பாரபட்சமின்றி இந்த நோயானது அனைத்து தரப்பு மக்களிடமும் பரவுகிறது வேதனை அளிக்கிறது.

மேலும் இந்நோயானது தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக எழுந்து கண்ணுக்கே தெரியாமல் பரவி வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இதற்காக மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

From around the web