பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் 150 ஆசிரியர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்ததை அடுத்து பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் அம்மாநிலத்தில் உள்ள 150 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் 125 ஆசிரியர்களுக்கும் 3 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் 150 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

From around the web