பள்ளிகள் திறக்கப்பட்ட 4 நாட்களில் 1400 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல் 

 

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் என மொத்தம் 1400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த 2ம் தேதி ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நான்கு நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும் 575 மாணவர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் பள்ளிகளை மீண்டும் ஓடிவிடலாமா என அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது

அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறந்த நான்கே நாட்களில் 1400க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகத்திலும் வரும் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நவம்பர் 10ல் பள்ளிகள் திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவேகமாக கொரோனா பரவி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web