நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா!

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!
 
நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா!

மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் நோயாக தற்போது வலம் வந்து உள்ளது கொரோனா வைரஸ்.கொரோனா முதன் முதலில் சீனாவில் கண்டறியப் பட்டதாக தகவல். அதைத்தொடர்ந்து உள்ள பல நாடுகளுக்கும் கொரோனா பரவியது. மேலும் இந்தியாவிலும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவ தொடங்கியது. மேலும் இந்திய அரசானது எந்த நாடும் கடைபிடிக்காத முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தி மற்ற எல்லா நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து.

corona

இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கமானது கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் மகாராஷ்டிரா, டெல்லி பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் தலைவிரித்தாடுகிறது. தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா அதிகரித்துள்ளது. மேலும் நேற்றைய தினம் தமிழக அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்துள்ளது. நேற்றைய தினம் திருநெல்வேலியில் ஒரே தெருவில் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .தொடர்ந்து தற்போது சென்னையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன்படி சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியானது. மேலும்  சாலையில் 249 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு வளாகம் தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடைகள் கொண்டு அடைக்கப்பட்டன. மேலும் கொரோனா பாதித்த பகுதியில் காய்ச்சல் முகாம் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று பரிசோதனை ஈடுபட்டுள்ளனர்.

From around the web