பெரம்பூர் ரயில்வே பணிமனையில் 132 பேருக்கு கொரோனா!

பெரம்பூர் ரயில்வே பணிமனையில் நேற்றுவரை 132 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!
 
பெரம்பூர் ரயில்வே பணிமனையில் 132 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ரயில் போக்குவரத்து காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஒரு சிறு கிராமங்களிலும் கூட ரயில் தண்டவாளங்கள் காணப்படுகின்றன. ரயில் தண்டவாளங்களில் ரயில் பெட்டிகள் மூலம் பயணிகள் அனைவரும் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலை காணப்படும் பகுதியாக உள்ளது பெரம்பூர் பகுதி. மேலும் இந்த பெரம்பூர் பகுதியில் உள்ள ரயில்வே பணிமனையில் தொழிலாளர்களுக்கு  கொரோனா கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது.corona

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் இரண்டாவது அலையாக நாடெங்கும் பரவுகிறது. அதில் கொரோனா  பாரபட்சமின்றி அனைவருக்கும் வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெரம்பூர் ரயில்வே பணிமனையில் நேற்று வரை 132 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கேரேஜ்-வேகன்கள் பராமரிப்பு பணிமனைகளில் 4 தொழிலாளர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 64 பேர் கொரோனா சிகிச்சையில் அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரம்பூர் ரயில்வே பணிமனையில் கடந்த எட்டு மாதங்களில் கொரோனாவால் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. மேலும் தொழிலாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பெரம்பூர் ரயில்வே பணிமனையில் ரயில் பெட்டிகளைத் பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

From around the web