நெல்லையில் ஒரே தெருவில் 13 பேருக்கு கொரோனா!செந்தமிழ் நகரில் கிருமிநாசினி தெளிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு உறுதியாகியுள்ளது!ஒரே தெருவில் 13 பேருக்கு கொரோனா!
 
நெல்லையில் ஒரே தெருவில் 13 பேருக்கு கொரோனா!செந்தமிழ் நகரில் கிருமிநாசினி தெளிப்பு!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொரோனா  நோய் தான். இந்த  கொரோனா நோயானது முதலில் சீனா நாட்டில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகமெங்கும் இந்த கொரோனா நோயானது பரவியது. மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிலும் இந்த  கொரோனா வைரஸ்  பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டின் தொடக்கம் முதலே நாடெங்கும் முழு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தியது.

corona

இந்நிலையில் தற்போது சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சோகத்திலும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என பலரும் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் ஒரே நாளில் 68 பேருக்குக் கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்திலுள்ள செந்தமிழ் நகர் பகுதியில் ஒரே தெருவில் 13 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் செந்தமிழ் நகரில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நோய்த் தடுப்பு பணிகள் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல மாவட்டங்களிலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் மனதில் மிகவும் கவலையுடன் பயமும் எழுந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web