4வதுநாளாக மூவாயிரத்து தாண்டிய கொரோனா!ஒரே நாளில் 11 பேர் இறந்ததாக தகவல்!

தமிழகத்தில் ஒரே நாளில் 3672 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளது!
 

மக்கள் மத்தியில் உயிர்கொல்லி நோய் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவு வருவது கொரோனா தான். இந்த  கொரோனா முதலில் சீனாவில் உருவானது  கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவிலும் கொரோனா. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வரை கொரோனா குறைவாக இருந்தது. தற்போது சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பதிப்பானது தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா மிகவும் அதிகரித்துள்ளது.

corona

மேலும் தமிழகத்தில் நான்கு நாட்களாக கொரோனா பதிவானது 3000 தாண்டியது. இன்றைய தினம் கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் 3688 பேருக்கு உறுதியாகி உள்ளது. அதில் தமிழ்நாட்டில்  3663 பேரும் ,வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேரும் சேர்த்து 3672பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா காரணமாக ஒரே நாளில் 11 பேர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு நாளில் கொரோனா இருந்து ஒரே நாளில் 1842பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி தகவல்.

 தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இரண்டு நாட்களாக பாதிப்பானது 1300 கண்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் 1344 இருந்த நிலையில் தற்போது 1335 ஆக உள்ளது, கோவையிலும் 376 பேர்கள் கொரோனாவும் செங்கல்பட்டு 310 பேருக்கு கொரோனா உறுதியாகின்றது.

From around the web