முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது: மத்திய மண்டல ஐஜி தகவல் 

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரனோ வராமல் தடுப்பதற்காக தடுப்பூசியினை தயாரிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் கொரோனா வராமலிருக்க எதைச் சாப்பிட வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி  நடந்து வரும் நிலையில் அதில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராமன் அவர்கள் முருங்கைக் கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காவலர்களுக்கு அவர் யோகாசனம் மற்றும் மூச்சு பயிற்சி உள்ளிட்ட அறிவுரைகள் கூறிய  பின்னர் காவலர்கள் முக்கியமாக கீரை சாப்பிட வேண்டும் அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரையை அதிகம் சாப்பிட்டால் கொரோனா வராது என்று கூறியுள்ளார். அதேபோல் மைதா பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆலோசனை கூறினார் சத்தான உணவை எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

From around the web