சென்னையை சிதைக்கும் கொரோனா!மற்ற மாவட்டங்களிலும் அதேதான்!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3789 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!
 
சென்னையை சிதைக்கும் கொரோனா!மற்ற மாவட்டங்களிலும் அதேதான்!

தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து விட்டது. இந்நோயானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டறிய தொடங்கி அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது மக்களை வேதனைப்படுகிறது. குறிப்பாக மார்ச் மாதத்திலிருந்து கொரோனாநோயின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிராக தமிழகத்தின் சார்பில் பல் வேறு கட்டுப்பாட்டு விதிகள் போடப்பட்டுள்ளன எனினும் நோயினை கட்டுப்படுத்த முடியாதது மறுக்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

corona

மேலும் தமிழக அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கட்டுப்பாடுகள் விதித்தாலும் இந்நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரில் தொடர்ந்தும் சில தினங்களாக 3000 கடந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 789 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 906 பேருக்கும் கோவையில் 689 பேருக்கும் திருவள்ளூரில் 510 பேருக்கும் மதுரையில் 495 பேருக்கும் நெல்லையில் 449பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சேலத்தில் 411 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 392 பேருக்கும் திருச்சியில் 359 பேருக்கும் தூத்துக்குடியில் 345 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 318 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.  தஞ்சையிலிருந்து வேலூரில் 303 பேருக்கும் தஞ்சாவூரில்283 பேருக்கும் தென்காசியில் 281 பேருக்கும் ஈரோட்டில் 225 பேருக்கும் நாமக்கலில் 223 பேருக்கும் குமரியில் 220 பேருக்கும் திண்டுக்கல்லிலிருந்து 212 பேருக்கும் திருவண்ணாமலையில் 201பேருக்கும் ராணிப்பேட்டையில் 179 பேருக்கும் கடலூரில் 178 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் தேனியில் 160 பேருக்கும் விழுப்புரத்தில் 146பேருக்கும் திருப்பத்தூரில் 139 , விருதுநகரில் 126 பேருக்கும் திருவாரூரில் 102 பேருக்கும் கண்டறிய பெற்றதாக கூறப்படுகிறது.

From around the web