உலக அளவில் தற்போது 18.63 கோடி பேருக்கு கொரோனா நோய்!

உலக அளவில் தற்போது உள்ள மக்களிடையே 18.6 3 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
corona

தற்போது உலகிலுள்ள அனைவரும் அச்சமடையும் ஒரு வைரஸ் என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்த படி இந்த கொரோனா தெரியாமல் மனிதனின் உடலுக்குள் சென்று மனிதனின் உயிரை இழப்பிற்கு தள்ளுகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இந்த நோயின் தாக்கம் ஆனது அதிகமாகவே காணப்பட்டது இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். மேலும் தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்தப்பட்டது என்றே கூறலாம்.corona

மேலும் இந்த நோயின் ஆரம்ப கட்டத்தில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வீரியமானது குறைக்கப்பட்டது.  தற்போது உலக அளவில் இந்த நோயின் பாதிப்பினால் உள்ளானவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி உலகில் 18.63 கோடி பேருக்கு இந்த நோய்  ஏற்பட்டதாக கூறப்படுகிறது மேலும் 40 புள்ளி 25 லட்சம் பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் 17.04 கோடி பேருக்கு இந்த நோயினால் குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது .

அமெரிக்காவில் புதிதாக 19,181 பேருக்கு இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .மேலும் அங்கு ஒரே நாளில் 160 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் அமெரிக்காவில் மொத்தம் 3.46 கோடி பேருக்கு பாதிப்பு என்றும் அவர்களில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 212 பேருக்கு நோயினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரேசிலில் ஒரேநாளில் 53 ஆயிரத்து 34 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அங்கு 1733 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது அங்கு மொத்த மதிப்பு 1.85 கோடி என்றும் அங்கு மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 344 என்றும் கூறப்படுகிறது.

From around the web