கட்சிக்கு ஒரு ஆளுன்னு 13 பேரோடு நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை முதல்வர்!!!

நாளை கொரோனா தடுப்பு காரணமாக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது!
 
கட்சிக்கு ஒரு ஆளுன்னு 13 பேரோடு நாளை தலைமை செயலகத்தில் ஆலோசனை முதல்வர்!!!

தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் பேச்சு அதிகமாக காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த கொரோனா நோய்க்கு எதிராக மிகவும் போராடி வருகின்றனர். இந்த  நிலையில் தற்போது இந்த நோய் காலத்திலேயே 10 ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் திமுக சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தான் தேர்தல் அறிக்கையாக கூறிய அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.stalin

இந்நிலையில் அவர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் நிவாரண பொருள்களையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் இருந்த செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தலைமை செயலகத்தில் கொரோனா  தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் கொரோனா  கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆலோசனை பெற குழு விவாதிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டமன்ற கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என 13 பேர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இதனால் நாளைய தினம் கூட்டத்தின் முடிவில் புதிதாக அறிக்கைகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web