கனிமொழிக்கு கொரோனா பிரச்சாரக் கூட்டம் ரத்து!வீட்டிலேயே தனிமைப்படுத்தபட்டார்!

திமுக எம்பி கனிமொழிக்கு  கொரோனா உறுதியானதால் அவரது பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது!
 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி நிலையில் அதற்கான வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னிலையில் தமிழகத்தின் பல வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

corona

மேலும் அவர் தமிழகத்தில் பகுதிகளிலும்சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீண்டும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் அவர் தனது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுகவின் மகளிரணி செயலாளராக இருக்கிறார் கனிமொழி. மேலும் அவர் திமுக சார்பில் எம்பியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சில தினங்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் கொரோனா உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.அவர் வெளியூர் பிரச்சாரத்தில் இருந்து நேற்று மாலை சென்னை திரும்பும்போது  சிறிதாக கொரோனா இருந்து விட்டதாகவும் தற்போது அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்த பட்டுள்ளார். மேலும் அவர் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் ரத்தானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web