கொரோனா குணமான இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட மாட்டார் என உலகம் முழுவதும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாங்காங் நாட்டில் திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருந்ததாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் ஒருவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டது. இவர் சிகிச்சையின் பலனாக குணமடைந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று அறிகுறி தெரிந்தது இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் ஒரு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதி பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்

ஏற்கனவே தெலுங்கானாவில் 2 பேருக்கும் மும்பையில் உள்ள மருத்துவர் ஒருவரும் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொரோனா வைரஸிடம் இருந்து குணமானவர்களும் ஜாக்கிரதையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web