தமிழகத்தை தாக்கும் கொரோனா! மருத்துவரை தொடர்ந்து தற்போது நீதிபதி உயிரிழப்பு!!

தஞ்சை மாவட்ட நீதிபதி கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது!
 
judge

நாட்டில் காணப்படுகின்றன ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் செவிலியர் காவலர்கள் போன்றோர் மிகவும் போராடி வருகின்றனர். மேலும் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் காவல் துறையினர் பொதுமக்கள் கட்டுப்பாட்டை தடுக்க தங்களது பணிகளில் மிகவும் திறம்பட ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய போராட்ட வீரர்களுக்கும் அவ்வப்போது கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.corona

மேலும் ஒரு சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்கிறது.  இன்றைய தினம் கர்ப்பிணி பெண் மருத்துவர் இந்த கொரோனா நோயின் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நீதிபதி ஒருவர் இந்த கொரோனா நோயின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட நீதிபதி வனிதா சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீதிபதி வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காலை தினமே கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் தற்போது நீதிபதி ஒருவர் இறந்த சம்பவம் அனைவரையும் இழந்த சோகத்திலும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.மேலும் நாளுக்கு நாள் இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவது பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

From around the web