கொரோனாவில் இருந்து மீண்ட 10 பேருக்கு மீண்டும் கொரோனா: சென்னையில் அதிர்ச்சி

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது சிங்கப்பூர் ஹாங்காங் போன்ற மேலை நாடுகளில் இருந்த நிலையில் தற்போது சென்னையிலேயே மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்தி வந்துள்ளது

சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் மொத்தம் 10 பேர் கொரோனாவால் இருந்து மீண்டவர்கள் மீண்டும் ஒரு பாசிட்டிவ் வந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவமனை ஜெயந்தி அவர்கள் கூறியபோது, ஏற்கனவே கொரோனா வைரஸ் உடலில் இருந்துகொண்டு அது முழுவதும் சரியாகாமல் வந்திருக்கலாம் அல்லது மீண்டும் ஒருமுறை புதியதாக கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என்றும், இதுகுறித்து மரபணு சோதனை செய்தால் மட்டுமே தெரிய வரும் என்று கூறியுள்ளார் 

ஏற்கனவே சென்னையில் தினமும் சராசரியாக 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 10 பேர் மருத்துவமனையில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

From around the web