தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு:

 

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 5,63,691 ஆக உயர்வு என்று தமிழக சுகாதாரத்துறை தகவல்

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் மேலும் 1089 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின் சென்னையில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது. மேலும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,603 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 46,405 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 508,210ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web