ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: மோசமான உலக சாதனை செய்த இந்தியா

 
ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: மோசமான உலக சாதனை செய்த இந்தியா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளையே அறிவுறுத்தியுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் எந்த நாட்டிலும் 4 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் ஒரே நாளில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

corona india

கடந்த 21ஆம் தேதி முதல் முறையாக மூன்று லட்சத்தை கடந்து இருந்த எண்ணிக்கை பத்தே நாட்களில் 4 லட்சமாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததே அதிகமாக இருந்தது 

ஆனால் இந்த மோசமான சாதனையை இந்தியா கடந்து தற்போது நான்கு லட்சத்துக்கும் மேல் என்ற புதிய மோசமான சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 48 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் இன்னொரு மோசமான சாதனை ஆகும் 

இதனை அடுத்து இந்தியாவில் அதிரடி நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

From around the web