மத்திய பெண் அமைச்சருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தற்போது ஓரளவு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது 

இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள்  ஆகியோர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் இதில் ஒரு சிலர் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்தார் என்பதையும் பார்த்து வந்தோம் 

இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

இது குறித்து சற்று முன்னர் ஸ்மிருதி இராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ’தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தன்னிடம் சில நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web