கேரளாவில் கொரோனா 2வது அலை: சுதாரிக்கும் தமிழகம்!

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு  படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் வெறும் 16 ஆயிரம் பேர்கள் மட்டுமே தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று கேரளாவில் 7007 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவல் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

kerala corona virus

கேரளா சுகாதாரத்துறை மற்றும் கேரள அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக எடுத்து வந்த போதிலும் இரண்டாவது அலை அங்கு பரவுவதை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இரண்டாவது அலை தோன்றியதை அடுத்து தமிழகத்திலும் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. எனவே பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படும் என்றும் மேலும் ஒரு சில நிபந்தனைகள் கெடுபிடிகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web