20,000 ஆண்டு முன்பே கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

 
corona

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலுள்ள வூகான் மாகாணத்தில் முதன் முதலாக தோன்றியது என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுக்குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் இருந்ததாகவும் அதன் தாக்கம் இப்போதும் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. கரண்ட் பயாலஜி என்ற ஆய்விதழில் இது குறித்து கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில் இப்போது இருக்கும் சீனா, ஜப்பான், மங்கோலியா, வடகொரியா, தென் கொரியா, தைவான் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் அடிப்படையில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கொரோனா மரபணு சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web