"கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி";யார் யாருக்கெல்லாம்  செல்லுபடியாகும்?

யார் யாருக்கெல்லாம் முதல்வர் அறிவித்த கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி கிடைக்கும்
 
nagaikadan

தற்போது நம் தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக காணப்படுகின்றது. மேலும் மக்கள் மத்தியில் அவை நல்ல வரவேற்பையும் பெறுகிறது. இந்த நிலையில் தற்போது சில நிமிடங்கள் முன்பாக தமிழகத்தில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.nagai

மேலும் அவர் அறிவித்த நகை கடன் தள்ளுபடி ஆனது சில முக்கிய விவரங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஒரே குடும்பத்திற்கு ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகை கடன் சில தகுதியின் அடிப்படையில் தள்ளுபடியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது . ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைகளையும் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 மேலும் 51 விதமான தகவல்கள் கடந்த ஒரு மாதமாக சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் பகுக்கபட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.  கடன் பெற்றவரின் பெயர், கடன் பெற்றவர்களின் விவரம், கடன் பெற்ற நாள், சேகரிப்பு போன்றவைகளும் கடன் தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர்கள் தகவல் குறிப்பு,  கடன் பெற்றோரின் ஆதார் அட்டைஎண் ,முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கபட்டன

From around the web