கூட்டுறவு வங்கியின் நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

 
gold loan

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு வங்கிகள் ஐந்து சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த கடன் தள்ளுபடிக்கு சில தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த தகுதியின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார் 

ஏழை விவசாயிகள் மற்றும் முதியோர்கள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்கள் என்பது உறுதி செய்யப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தகுதியின் அடிப்படையில் கடன் வாங்கியவர்களின் விவரங்கள் கடந்த சில நாட்களாக சேகரிக்கப்பட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளிவந்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் வாங்கியவர்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web