சீர்காழி பூம்புகாரில் கனமழையால் குளிர்ச்சி! மக்கள் மகிழ்ச்சி!

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
சீர்காழி பூம்புகாரில் கனமழையால் குளிர்ச்சி! மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உச்சத்திற்கு சென்றுவிடும். இதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படுவர். மேலும் ஒரு சில பகுதிகளில் வெயிலின் தாக்கமானது தலைவிரித்தாடும். மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் தாக்கமானது அதிகரித்து மக்களை எரிச்சலில் உள்ளாகும். மேலும் கோடைகாலம் தொடங்கியதும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிடும்.

rain
Caption

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் காலம் தொடங்கியதும் அங்குள்ள மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் .இதனால் சென்னை வாசிகள் மிகவும் அச்சத்துடனே இந்த கோடை காலத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கி இருந்தும் தமிழகத்தில் சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் சில தினங்கள் முன்பு இந்திய வானிலை ஆய்வு மையமானது தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது இதனால் மக்கள் மிகவும் சந்தோஷத்துடனும் இருந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் ,பூம்புகாரில் கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவுகிறதாக மக்கள் கூறி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். இது போன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவது மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளது.

From around the web