ஜெயிலில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த தந்தை: பரபரப்பு தகவல்

கொலை வழக்கில் சிக்கி கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஒருவர் தற்போது சிறையில் இருந்தபோது கிடைத்த பணத்தில் மகளுக்கு ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த தகவல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது தாய்மாமனை கொலை செய்த குற்றத்திற்காக ஆனந்த் என்பவர் கடந்த 2005ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில் நன்னடத்தை காரணமாக சமீபத்தில் தண்டனை குறைக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்
 

ஜெயிலில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த தந்தை: பரபரப்பு தகவல்

கொலை வழக்கில் சிக்கி கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஒருவர் தற்போது சிறையில் இருந்தபோது கிடைத்த பணத்தில் மகளுக்கு ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த தகவல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது தாய்மாமனை கொலை செய்த குற்றத்திற்காக ஆனந்த் என்பவர் கடந்த 2005ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில் நன்னடத்தை காரணமாக சமீபத்தில் தண்டனை குறைக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்

தற்போது அவர் குடும்பத்துடன் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தனது மகள் ஆன்லைன் படிப்புக்காக செல்போன் இல்லாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து வருத்தம் அடைந்தார். இதனையடுத்து சிறைச்சாலையில் கைதியாக இருந்த போது தோட்ட வேலை மற்றும் ஆசாரி வேலை செய்த பணத்தில் இருந்து தனது செல்ல மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்தார்

இது குறித்து அவர் கூறியபோது ’ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள என்னிடம் ஒரு செல்போன் இல்லை என்று என் மகள் கூறியவுடன் சற்றும் யோசிக்காமல் ஜெயிலில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு செல்போன் வாங்க கிளப்பி விட்டேன். எனது மகள் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்றும் சமுதாயத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதனால் என்னால் முடிந்த அளவுக்கு அவரது படிப்பிற்கு உதவி செய்வேன் என்றும் கூறினார்

மேலும் தான் ஜெயிலில் இருந்தபோது தான் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web