9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

 

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் அதற்கு பதிலாக தினமும் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் முழு அளவிலான பள்ளி கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றும் முதல் தவணையாக பள்ளி கட்டணத்தில் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது இந்த உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முழு அளவிலான பள்ளி கட்டணத்தை செலுத்த கோரும் பள்ளிகள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலிப்பதாக 9 தனியார் பள்ளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

மேலும் சம்பந்தப்பட்ட 9 பள்ளிகளும் அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க தனி மெயில் ஐடி உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது 
இந்த நிலையில் பள்ளி கட்டணம் குறித்து வந்த 111 புகார்களில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web