தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

சென்னையில் சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை செய்கிறார்!
 
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற முடிந்ததால் தமிழகத்தில் தற்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து காணப்படுகிறார். இந்த தேர்தலின் முடிவு வரும்வரை தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழகம் மட்டுமின்றி தேர்தல் நடைபெற்ற ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோன்ற நடைபெறும் என்பதும் உண்மைதான். அதன்படி தற்போது தமிழகத்தில் தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் உள்ளார். இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கண்ணுக்கு தெரியாத கிருமி கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.

corona

ஆனால் தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி முக கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாட்டு விதிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது.

மேலும் இந்த ஆலோசனை தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த குறித்த நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனையில் சென்னையின் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆலோசனையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸின் தாக்கம்  இரண்டாவது அலையாக தமிழகத்தில் வேகமாக பரவி வருவது மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. இதனால் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

From around the web