பிரதமருக்கு அடுத்து முதல்வரோடு ஆலோசனை! விவரங்கள் பற்றி விளக்குகிறார்!

பிரதமருடன் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து முதல்வர் உடன் விளக்குகிறார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்!
 
பிரதமருக்கு அடுத்து முதல்வரோடு ஆலோசனை! விவரங்கள் பற்றி விளக்குகிறார்!

தமிழகத்தில் முன்னர் அறிவித்த தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி வைத்திருந்தன .குறிப்பாக தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன. மேலும் அதிமுகவின் சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.rajeev ranjan

மேலும் அவர் சில தினங்கள் முன்பாக குடல் சம்பந்தமான நோய் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் வீட்டில் உள்ளார்.மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் தமிழகத்தில் தற்போது முதல்வர் ஆட்சி இல்லாமல் தலைமைச் செயலாளர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தலைமைச் செயலாளர் பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் சில மணி நேரத்துக்கு முன்னர் ஆலோசனையில் இருந்தார். அதன் பின்னர் தற்போது அவர் தமிழக முதல்வரின் வீட்டிற்கு சென்று அவருடைய ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் தற்போதைய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் உள்ளார். மேலும்  ஆலோசனையில் அரசின் ஆலோசகர் சண்முகம், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் டிஜிபி போன்றோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்து விவரங்கள் பற்றி முதல்வரிடம் எடுத்து வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web