முதன்முறையாக முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை! யார் அவர்?

தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் ஆலோசனை செய்கின்றனர்!
 
முதன்முறையாக முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை! யார் அவர்?

தற்போது தமிழகத்தில் பத்து ஆண்டுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. திமுக கட்சியின் சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். மேலும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் விடியல் ஆன ஆட்சி என்று விமர்சனங்கள் வெளியேறுகின்றன. இதனால் திமுகவின் ஆட்சி தொடக்கத்திலேயே மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளது கண்முன்னே தெரியவந்துள்ளது.radha krishnan

அவருக்கு உதவும் வண்ணமாக மக்களுக்கு பணியாற்ற அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர்களும் தங்களது பணியை மிகவும் திறம்பட செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் முதன்முறையாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் திமுக அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திமுக ஆட்சியில் மாற்றப்படுவார் என்ற சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவரை இடமாற்றம் செய்யாமல் தற்போது வரை தக்க வைத்துள்ளது திமுக. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் பங்கேற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் முதன்முறையாக ஆலோசனையில் உள்ளார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web