தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை! யார் யார் இதில் பங்கேற்பு?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்!
 
thanaravalargal

தற்போதைய தமிழகத்தில் ஊரடங்கு காலம். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடினமாக ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. மேலும் தமிழகத்தில் காய்கறி மளிகை சாமான் போன்றவைகள் வாங்குவதற்கு 10:00 மணி வரையே அனுமதி அளித்துள்ளன. இதனால் மக்கள் அனைவரும் காலையில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை சந்தைகளிலும் மார்க்கெட்களில் வாங்கி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதிகளிலும் சமூக இடைவெளி பின்பற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு பல்வேறு தொழிற்சாலைகளில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளன.tamilnadu

மேலும் பலரும் உணவின்றி தவிக்கின்றன. இந்நிலையில் அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது உணவுப் பொட்டலங்களையும் உணவுகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் அவை பெரும்பாலும் பெருநகரங்களில் கொடுக்கப்படுவதாக காண்பிக்கிறது மேலும் அத்தகைய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவத் ஒரு மட்டுமின்றி அதனை கண்டு பிறரும் உதவ முன் வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பகிரப்படுகிறது.

 இத்தகைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தற்போது நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல தொண்டு நிறுவனங்களுடன் நம் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்றுள்ளார். மேலும் உயர் அதிகாரிகள் பலரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது.

From around the web