"பலத்த காற்று வீசும்"  மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை!!!

பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டவர்கள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது
 
fishers

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியது என்றே கூறலாம். ஏனென்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இது தமிழகத்தில் குளிர்ந்த நிலையை உறுதி செய்கிறது. மேலும் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் பூர்த்தியாகிறது, இது தமிழகத்தில் நீர் பற்றாக்குறை இருக்காது என்பதை வெளிக்காட்டுகிறது.arabic

 தற்போது தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசிக்கொண்டே உள்ளது. இது மீனவர்களுக்கு ஒரு சவாலாக காணப்படும், ஏனென்றால் அவர்கள் காற்று வீசும் சமயத்தில் பெரும்பாலும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிக்கப்படும்.

இந்த  நிலையில் தற்போது மேலும் ஒரு எச்சரிக்கை அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. அதன்படி கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கூறியுள்ளது. மேலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

From around the web