"சதிகாரர்களுக்கு இனி கட்சியில் இடமில்லை!"-மக்கள் நீதி மய்ய தலைவர்;

இனி சதிகாரர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்
 
mnm

தனது நடிப்பாலும் தனது அழகாலும் மக்களிடையே உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கமலஹாசன். மேலும் இவர் பல வெற்றித் திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சியான மக்கள் நீதி மையம் சார்பில் பல வேட்பாளர்களும் களமிறங்கினார். ஆயினும் சட்டமன்ற தேர்தலில் கமலஹாசன் மற்றும் அவரது கட்சியின் வேட்பாளர்கள் பலரும் படுதோல்வி அடைந்தன.mnm

மேலும் அதனை தொடர்ந்து கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகளும் விலகினர். இதனால் கட்சியானது வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி  மய்ய  தலைவர் டாக்டர் கமலஹாசன் சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி சதிகாரர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கூறியுள்ளார் மேலும் நம்மை படகாக்கி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் விரும்பும் சதிகாரர்களுக்கு இனி ஒருபோதும் கட்சியில் இடம் கிடையாது என்று கூறியுள்ளார் கமலஹாசன்.

மேலும் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் நிர்வாகிகள் மத்தியில் கமலஹாசன் பேசியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க செய்வோம் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயார் என்றும் கட்சி தலைவருமான கமலஹாசன் கூறியுள்ளார்.

From around the web