"பெண் மயக்கம்";ஒரே நேரத்தில் "அடுத்தடுத்து 2 தடுப்பூசி டோஸ்!!"

பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது
 
vaccine

தற்போது நான் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக தடுப்பூசி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை உருவானது என்றே காணலாம். மேலும்  தமிழகத்தில் குறிப்பாக சில தினங்கள் முன்பாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், கல்லூரிக்கு வரும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் அலுவலக வேலை ஆட்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறப்பட்டிருந்தது.vaccine

இதனால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி போடுவதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் மத்தியில்  தமிழகத்தில் தடுப்பூசி பற்றி அவ்வப்போது புகாரும் எழுந்து கொண்டு வருகிறது. அதன் வரிசையில் தற்போது பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் பொண்ணாடத்தில் லட்சுமி என்பவருக்கு அடுத்தடுத்து 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது, மேலும் லட்சுமிக்கு 50 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூலி தொழிலாளியான லட்சுமிக்கு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் 2 தடுப்பூசி போட்டதாக புகார் . மயக்கமடைந்த லட்சுமியை மூன்று நாட்கள் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web