மீன்பிடி தடை காலத்தை குறைக்க வேண்டும் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி!

நடப்பாண்டில் மீன்பிடி தடை தடை காலத்தை 61  நாட்களுக்கு பதில் 45 நாட்களுக்கு குறைக்கவேண்டும் கே எஸ் அழகிரி!
 
மீன்பிடி தடை காலத்தை குறைக்க வேண்டும் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி!

தமிழகத்தில் சொல்லியிருந்தபடி சட்டமன்றத் தேர்தல் ஆனது ஏப்ரல் 6 ஆம் தேதியான சில தினங்கள் முன்பு நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றனர். மேலும் வாக்காளர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு  கையுறைகள், முக கவசம் ,சனிடைசர் கொடுக்கப்பட்டன. காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7மணி வரை 12 மணி நேரங்களாக நடைபெற்றது.

alagiri

அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பு மத்தியில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணி கட்சிகள் களம் இறங்கி இருந்தன. அதன்படி தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரசின் மாநில தலைவராக கே எஸ் அழகிரி உள்ளார்.

அவர் தற்போது மீனவர்கள் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி நடப்பாண்டில் மீன்பிடி தடை காலத்தை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். நடப்பாண்டில் மீன்பிடி தடை காலம் 61 நாட்களுக்கு பதில் 45 நாட்களாக  குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு சுமார் 135 நாட்கள் கொரோனா காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

From around the web