திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் பிரச்சாரம்!

காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரை முருகனை ஆதரித்து தமிழக காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பிரச்சாரம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில்  நடக்க உள்ள நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. இதில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கட்சி கூட்டணி . திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும் ,கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது.மேலும் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் தன்னுடன் கூட்டணி வைத்து திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

dmk

திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின்  தமிழகத்தில்  உள்ள பகுதிக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக வேட்பாளர் துரைமுருகன் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது  அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் காங்கிரஸ் மாநில தலைவர் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

அவர் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கூறினார் காட்பாடி தொகுதிக்கு துரைமுருகன் கிடைத்தது வைடூரியம்    போன்றவர் எனவும் கூறினார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையானது வளர்ச்சிக் ஆனது எனவும் காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறினார்.

From around the web